Site icon Manakkum Samayal | South Indian Recipes

ஏலக்காய் – Cardamom – इलायची

elachi

ஏலக்காய் (Tamil) – Cardamom (English) – इलायची (Hindi)

ஏலக்காய் சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும்.

சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.

ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும்.

மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள்.

குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும்.

ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.

ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மருத்துவ குணங்கள் ஏலக்காய்

Click here to check out website.

Check our Youtube Channel here

Exit mobile version